Latestமலேசியா

ஹரி ராயாவுக்கு மக்களுக்கு மேலும் பல நல்ல செய்தி – பிரதமர் விரைவில் அறிவிப்பு

புத்ராஜெயா, மார்ச்-9-அடுத்த வாரக் கடைசியில் கொண்டாடப்படவுள்ள நோன்புப் பெருநாளை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு மேலும் சில நல்ல செய்திகளைப் பிரதமர் விரைவிலேயே அறிவிக்கவுள்ளார்.

டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் மூத்த பத்திரிகைச் செயலாளர் Tunku Nashrul Abaidah அதனை உறுதிப்படுத்தினார்.

ஏப்ரலில் வழங்கப்பட வேண்டிய STR ரொக்க உதவியின் இவ்வாண்டுக்கான இரண்டாம் கட்ட விநியோகத்தை முன்கூட்டியே நாளையே வழங்க இன்று காலைதான் பிரதமர் உத்தரவிட்டார்.

இந்நிலையில், மக்களின் வாழ்வாதாரச் செலவை குறைக்கும் வகையில் மேலும் பல புதிய உதவித் திட்டங்கள் மற்றும் அறிவிப்புகளை ஹரி ராயாவுக்குள் அன்வார் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அறிவிப்புகள் ஹரி ராயா கொண்டாட்டத்திற்கு முன் மக்களுக்கு நிதி மற்றும் சமூக ரீதியாக உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

மக்களின் நலன் மற்றும் பொருளாதார நிலையை மேம்படுத்துவதில் அரசாங்கம் தொடர்ந்து உறுதியாக செயல்பட்டு வருவதாகவும் Tunku Nashrul சொன்னார்.

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!