Latestமலேசியா

நோன்பு பெருநாளுக்கு பள்ளிகளுக்கு கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கோலாலம்பூர், மார்ச் 10-மார்ச் 21 ஆம் தேதியன்று கொண்டாடப்படும் என எதிர்பார்க்கப்படும் நோன்பு பெருநாளுக்கு முன்னதாக ,கல்வி அமைச்சு பிரிவு A மற்றும் பிரிவு B க்கு உட்பட்டு பள்ளிகளுக்கு ஒன்று மற்றும் இரண்டு நாட்களுக்கு கூடுதல் விடுமுறைகளை அறிவித்துள்ளது.

கெடா, கிளந்தான் மற்றும் தெரெங்கானு மாநிலங்களை உள்ளடக்கிய A பிரிவைச் சேர்ந்த பள்ளிகள் மார்ச் 19 ஆம் தேதி வியாழக்கிழமை தங்கள் விடுமுறைகளைத் தொடங்கும். B பிரிவுகளை உள்ளடக்கிய பள்ளிகளுக்கு கூடுதலாக இரண்டு நாள் விடுமுறை இருக்கும்.

மலாக்கா, ஜோகூர், நெகிரி செம்பிலான், பகாங், பேராக், பெர்லிஸ், பினாங்கு, சபா, சரவாக், சிலாங்கூர் , கோலாலம்பூர், லாபுவான் மற்றும் புத்ராஜெயா ஆகிய கூட்டரசு பிரதேசங்களை உள்ளடக்கிய B பிரிவில் இடம்பெற்றுள்ள பள்ளிகளுக்கு மார்ச் 19 ஆம் தேதி வியாழக்கிழமை மற்றும் மார்ச் 20ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஆகிய தேதிகளில் கூடுதலாக இரண்டு நாள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இம்முறை நோன்பு பெருநாள் விடுமுறையும் பள்ளிகள் முதல் தவணைக்கான விடுமுறையுடன் ஒத்துப்போகுவதாக அமைவதால் மாணவர்கள் நீண்ட விடுமுறையை அனுபவிக்க முடியும்.

A- பிரிவு பட்டியலில் இடம்பெற்ற பள்ளிகள் மார்ச் 20 ஆம் தேதி முதல் மார்ச் 28ஆம் தேதிவரை ஒன்பது நாட்களும் B-பிரிவு பட்டியலில் இடம்பெற்ற பள்ளிகள் மார்ச் 21ஆம்தேதி முதல் மார்ச் 29 ஆம்தேதிவரையிலும் விடுமுறையை பெற்றுள்ளன.

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!