Latestஉலகம்

நியூ யோர்க்கில் ஓடுபாதையில் தீயணைப்பு வாகனத்துடன் விமானம் நேருக்கு நேர் மோதல்; விமானி, துணை விமானி பலி

நியூ யோர்க், மார்ச்-23-அமெரிக்காவின் நியூ யோர்க் நகரின் LaGuardia விமான நிலையத்தில் நேற்றிரவு நிகழ்ந்த விபத்தில், ஏர் கனடா எக்ஸ்பிரஸ் விமானத்தின் விமானியும் துணை விமானியும் உயிரிழந்துள்ளனர்.

Montreal நகரிலிருந்து வந்த CRJ‑900 விமானம், அவசர சேவைக்காக ஓடுபாதையை கடந்து சென்ற தீயணைப்பு வாகனத்துடன் நேருக்கு நேர் மோதியது.

இதில் விமானத்தின் மூக்குப் பகுதி கடுமையாக சேதமடைந்தது.

அப்போது விமானத்தில் 76 பேர் இருந்தனர்.

அவர்களில் 13 பயணிகள் மற்றும் 2 மீட்புப் பணியாளர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

விபத்துக்குப் பிறகு விமான நிலையம் உடனடியாக மூடப்பட்டது.

தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.

அமெரிக்காவின் மிகவும் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றான இந்த LaGuardia, அண்மையில் தான் 8 பில்லியன் டாலர் மதிப்பில் புதுப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த விபத்து, ஓடுபாதையின் பாதுகாப்பு மற்றும் தரை வாகனங்களின் ஒருங்கிணைப்பைச் சுற்றிய கேள்விகளை எழுப்பியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!