Latestமலேசியா

குளுவாங் தாமான் சூரியாவிலுள்ள பேரங்காடியின் கழிப்பறையில் பெண்ணை வீடியோ எடுத்த 18 வயது இளைஞன் கைது

குளுவாங், மார்ச் 30 -குளுவாங் தாமான் சூரியாவிலுள்ள பேரங்காடியின் கழிப்பறையில் ஒரு பெண்ணை வீடியோ எடுத்த சந்தேகத்தின் பேரில் பதின்ம வயது இளைஞன் கைது செய்யப்பட்டான்.

வேலையில்லாத 18 வயதுடைய அந்த சந்தேக நபரின் செயல்களை பாதிக்கப்பட்ட பெண் கவனித்த பின்னர் அவன் கைது செய்யப்பட்டதாக குளுவாங் மாவட்ட போலீஸ் தலைவர் பஹ்ரின் முகமட் நோ( Baharin Mohd Noh ) தெரிவித்தார்.

கடந்த வியாழக்கிழமை இரவு மணி 9.20 க்கு இந்தச் சம்பவம் நடந்ததாகவும், பாதிக்கப்பட்டவர் 35 வயதான பெண் என்று விசாரணையில் தெரிய வந்ததாக அவர் கூறினார்.

தண்டனைச் சட்டத்தின் 509 ஆவது விதி மற்றும் 377 D விதியின் கீழ் விசாரணைக்கு உதவும் பொருட்டு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார் என்று பஹ்ரின் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டார்.

இந்நபருக்கு எதிரான விசாரணை அறிக்கை முழுமையடைந்து விட்டதால் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு கொண்டுவரப்படும் என அறிவிக்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!