Latestமலேசியா

செகாமாட் கோர விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சந்தித்த துணையமைச்சர் யுனேஸ்வரன்

செகாமாட், ஏப்ரல்-4-ஜோகூர், செகாமாட்டில் அண்மையில் நிகழ்ந்த கோர விபத்தில் குடும்ப உறுப்பினர்களை இழந்த குடும்பத்தை, அத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் தேசிய ஒருமைப்பாட்டுத் துறை துணை அமைச்சருமான ஆர். யுனேஸ்வரன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

அவ்விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதில், கார்த்திக் தனது தந்தை, தாய் மற்றும் உறவினரை ஒரே நேரத்தில் இழந்துள்ளார்.

அவரின் 2 இரண்டு குழந்தைகளும் கடுமையாக காயமடைந்துள்ளனர்.

23 வயது ஹரிஹரன் இரு கால்களும் முறிந்த நிலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 19 வயது தங்கை சுகுன்யா, அண்மையில் தான் SPM முடிவுகளை பெற்றிருந்த நிலையில், மூளையில் ஏற்பட்ட படுகாயம் காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிருக்கு போராடி வருகிறார்.

இந்த விபத்து, சாதாரண விபத்து அல்ல; போதைப்பொருள் உட்கொண்டு வாகனமோட்டிய ஓட்டுநரின் கவனக்குறைவால் ஏற்பட்டதாகும்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு முழு ஆதரவு வழங்கப்படும் என்றும், காயமடைந்தவர்களின் உடன்பிறப்புகளின் மருத்துவச் செலவுகளைத் தாம் முழுமையாக ஏற்கவிருப்பதாகவும் யுனேஸ்வரன் தெரிவித்தார்.

அதே சமயம், இச்சம்பவத்திற்கு நீதி பெற்றுத்தர உறுதியுடன் செயல்படுவோம் என்றும் அவர் சொன்னார்.

துணையமைச்சர், முன்னதாக கிள்ளானில் மதுபோதை மற்றும் போதைப்பொருள் உட்கொண்டு காரோட்டிய ஆடவரால் மோதப்பட்டு உயிரிழந்த மோட்டார் சைக்கிளோட்டி Amirul Hafiz Omar-ருன் குடும்பத்தாரையும் நேரில் சென்று கண்டு ஆறுதல் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!