Latestமலேசியா

பிரபல சுற்றுச்சூழல் செய்தியாளர் கராம் சிங் வாலியா 67 வயதில் காலமானார்

கிள்ளான், ஏப்ரல்-6-பிரபல சுற்றுச் சூழல் செய்தியாளர் கராம் சிங் வாலியா (Karam Singh Walia) 67 வயதில் இன்று அதிகாலை காலமானார்.

கல்லீரல் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அவர், அதிகாலை 3.30 மணியளவில் கிள்ளானில் உள்ள வீட்டில் உயிரிழந்ததை, குடும்பத்தார் உறுதிப்படுத்தினர்.

கராம் சிங் வாலியா, 1995 முதல் 2014 வரை TV3-வில் பணியாற்றிய போது, மலேசியர்களுக்கு மிகவும் பரிச்சயமான செய்தியாளராக வலம் வந்தார்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் அதிரடி செய்திகளுக்காக இவர் மிகவும் பிரபலமானவர்.

அதிலும் குறிப்பாக, குரலின் ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப அடிக்கடி கைகளை நீட்டியவாறு செய்தி படைக்கும் இவரின் தனித்துவமான உடல்மொழி மிகவும் பிரபலமாகும்.

அதற்கென்றே தனி இரசிகர் வட்டமும் இவருக்குண்டு.

2004 முதல் தொடர்ச்சியாக 4 ஆண்டுகளுக்கு சிறந்த சுற்றுச் சூழல் செய்தியாளருக்கான விருதையும், பிரசித்திப் பெற்ற Seri Angkasa விருதளிப்பில் 2 முறை சிறந்த செய்தியாளருக்கான விருதையும் இவர் வென்றுள்ளார்.

கராம் சிங் வாலியாவின் மறைவு மலேசிய பத்திரிகை உலகிற்கு ஒரு பெரிய இழப்பாக கருதப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!