
கோலாலம்பூர், ஏப்-7-சுயசேவை சலவை நிலையத்தின் சுவரில் ஒரு பூனைக்குட்டியை எறிந்த வைரல் வீடியோவில் காணப்பட்ட நபருக்கு எதிராக இன்று காஜாங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் கண்ணீர் விட்டு அழுதார்.
நீதிபதி கைனூர் அலீசா இஸ்மாயில் ( Khainur Aleeza Ismail) முன்னிலையில், நீதிமன்ற மொழிபெயர்ப்பாளர் குற்றச்சாட்டை வாசித்த பிறகு, 49 வயதான டோ டெக் ஹூய் ( Toh Teck Hooi ) தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து Tohவுக்கு 60,000 ரிங்கிட் அபராதத்தை நீதிபதி Khainur விதித்தார்.
அதோடு இந்த அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் ஆறு மாத சிறைத் தண்டனையை அனுபவிக்கும்படி Toh வுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
ஏப்ரல் 2ஆம் தேதி அதிகாலை 3.30 மணி முதல் 4 மணி வரை, தாமான் காஜாங் பிரிமாவில் உள்ள ஒரு சலவை நிலையத்தில், ஒரு கருப்பு நிற ஆண் பூனைக்குட்டியை சுவரிலும் மெத்தையிலும் மீண்டும் மீண்டும் தூக்கி எறிந்து கொடூரமாகத் துன்புறுத்தியதற்காக, Toh மீது 2015ஆம் ஆண்டின் விலங்குகள் நலச் சட்டம் 29(1)(a) பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டது.
சம்பவம் நடந்த அன்று, Toh அந்தச் செயலின் 59 வினாடி காணொளியைத் தனது சமூக ஊடகக் கணக்கில் பதிவேற்றியதாக நீதிமன்ற ஆவணங்கள் மூலம் தெரியவந்தது.



