Latestமலேசியா

மலாக்காவில் 5 வாகனங்கள் மோதிய விபத்து; பயங்கர வெடிப்புடன் கார் தீப்பற்றி எரிந்தது

மலாக்கா, ஏப்ரல்-7-மலாக்காவில் இன்று காலை 5 வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Toyota Vios, Mercedes-Benz, Tadano கிரேன், Perodua Bezza, Proton Saga FLX ஆகியவையே அந்த 5 வாகனங்களாகும்.

காலை 9.30 மணியளவில் ஏற்பட்ட இவ்விபத்தில், ஒரு கார் தீப்பிடித்து எரிந்தது.

விபத்துக்கு முன் ஒரு பெரிய வெடிப்புச் சத்தம் கேட்டதாக சாட்சிகள் கூறினர்.

விபத்து நடந்த உடனேயே அவசர சேவைப் பணியாளர்கள் சம்பவ இடம் விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

தீயும், காலை 11 மணிக்கு மேல் முழுவதுமாக அணைக்கப்பட்டது.

பொது மக்களும் இணைந்து வாகனங்களில் சிக்கியவர்களை காப்பாற்ற உதவினர்.

அவர்களில் 50, 60 வயதிலான இரு ஆடவர்களும் அடங்குவர்.

விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!