
புக்கெட், ஏப்ரல்-11-தாய்லாந்தின் புக்கெட் தீவில் சுற்றுப் பயணிகளை ஏற்றிச் சென்ற ஒரு speedboat படகு திடீரென வெடித்து தீப்பற்றியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் காலை நேரத்தில் கோகோ பியர் (Coco Pier) துறைமுகத்தில் நடந்தது.
அப்படகு பராமரிப்பு பணியில் இருந்தபோது, இயந்திர பகுதியிலிருந்து திடீரென பெரிய சத்தத்துடன் வெடிப்பு ஏற்பட்டதாக நேரில் கண்ட சாட்சிகள் தெரிவித்தனர்.
வெடிப்புக்குப் பிறகு சில வினாடிகளில் படகு முழுவதும் தீக்கிரையாகி, கரும்புகை வானில் பரவியது.
அருகில் இருந்தவர்கள் உடனடியாக உதவிக்கு ஓடி வந்தனர்.
உயிரிழந்தவர், 23 வயதான ஒரு சுற்றுலா வழிகாட்டி என பின்னர் உறுதிச் செய்யப்பட்டது.
மேலும் 5 பேர் காயமடைந்து மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



