Latestமலேசியா

மெட்ரிகுலேஷன் திட்டத்தில் 90% பூமிபுத்ரா ஒதுக்கீடு தொடரும் – பிரதமர் அன்வார் உறுதி

மாராங், ஏப்ரல்-14-மெட்ரிகுலேஷன் கல்வி வாய்ப்புகளில் சமநிலையை உறுதிச் செய்ய, பூமிபுத்ரா மாணவர்களுக்கான 90 விழுக்காடு ஒதுக்கீடு தொடரும் என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

மாராங்கில், திரங்கானு மெட்ரிகுலேஷன் கல்லூரி திட்டத்தின் அடிக்கல் நாட்டும் நிகழ்வில் அவர் இதனை வலியுறுத்தினார்.

10A பெற்ற மாணவர்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டாலும், பூமிபுத்ரா மாணவர்களுக்கு 90 விழுக்காடு தொடரும்; இது நகர மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கிடையிலான இடைவெளியை குறைக்க உதவும்.

மேலும், திறமையான மாணவர்கள், குறிப்பாக நகரங்களில் இருந்து வரும் மாணவர்கள் புறக்கணிக்கப்படமாட்டார்கள் என்றும் அவர் உறுதியளித்தார்.

2025 SPM தேர்வில் குறைந்தது 10A பெற்ற 6,717 மாணவர்களுக்கு நேரடியாக மெட்ரிகுலேஷன் அல்லது அதற்குச் சமமான கல்வி வாய்ப்புகள் வழங்கப்படும் அரசாங்கம் முன்னதாக் அறிவித்திருந்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!