
ஜகர்த்தா, ஏப் 17 – இந்தோனேசியாவின் மேற்கு கலிமந்தான் வட்டாரத்தில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் எட்டு பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களில் சிலர் ஹெலிகாப்டரின் சிதைவுகளிலிருந்து கண்டெடுக்கப்பட்டதாக மீட்பு அதிகாரி லெப்டினன்ட் கர்னல் நூரஹ்மான் கிந்தா திராதிஸ்யா ( Nurrachman Gindha Dradhizya )தெரிவித்தார்.
நேற்று தொடங்கி இன்று காலை வரை தொடர்ந்த மீட்புப் பணியில், ஹெலிகாப்டரின் சிதைவுகளிலிருந்து உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
நேற்று, உள்ளூர் நேரப்படி காலை 8.10 மணியளவில் PK-CFX ஹெலிகாப்டருடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
அந்த ஹெலிகாப்டர், மேற்கு கலிமந்தான் வட்டாரத்தின் மெலாவியிலிருந்து காலை 7.34 மணிக்கு குபு ராயாவை நோக்கிப் புறப்பட்டபோது விபத்துக்குள்ளானதாக கூறப்பட்டது.
இந்தத் தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கையில், விமானப்படை ஹெலிகாப்டர் ஒன்றின் உதவியுடன் 20 மீட்பு பணியாளர்கள் ஈடுபட்டனர்.



