Latestமலேசியா

தைப்பிங் ஆற்றில் குப்பை குவியலில் சடலம் மீட்பு: போலீஸார் விசாரணை

தைப்பிங், மே-4-பேராக், தைப்பிங்கில் உள்ள ஆற்றங்கரையில் அடையாளம் தெரியாத ஓர் ஆடவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

​நேற்று மாலை 6.45 மணியளவில் Sungai Jebong ஆற்றங்கரையில் உள்ள குப்பை குவியலுக்கு இடையே சிக்கிய நிலையில் இந்த உடல் இருப்பதை பொது மக்கள் கண்டனர்.

இது குறித்து உடனடியாக போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

​சம்பவ இடம் விரைந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், குப்பைகளுக்கு இடையே இருந்த உடலை மீட்டனர்.

பின்னர் அந்த உடல் மேல் விசாரணைக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

​உயிரிழந்தவர் யார், அவர் எப்படி இறந்தார் என்பது குறித்த விவரங்கள் இன்னும் தெரியவில்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!