Latestமலேசியா

சமூக ஊடகத்தில் சிலாங்கூர் சுல்தானை அவமதித்த ஆடவர் கைது

கோலாலம்பூர், மே-4-சிலாங்கூர் சுல்தான் சுல்தான் ஷாராஃபுடின் இட்ரிஸ் ஷாவை அவமதிக்கும் வகையில் சமூக ஊடகத்தில் பதிவுகளை ஏற்றியதன் பேரில் உள்ளூர் ஆடவர் ஒருவ கைதாகியுள்ளார்.

புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறை, பினாங்கு போலீஸ் மற்றும் MCMC ஒத்துழைப்பில் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனையில், 30 வயதிலான அவ்வாடவர், பினாங்கு புக்கிட் மெர்தாஜாமில் சனிக்கிழமை கைதுச் செய்யப்பட்டார்.

அவரிடமிருந்து 2 கைப்பேசிகளும் சிம் அட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

‘Lucas Liam’ என்ற ஃபேஸ்புக் கணக்கின் மீது, தேச நிந்தனை மற்றும் MCMC சட்டத்தின் கீழ் விசாரணை நடைபெறுகிறது.

சந்தேக நபர் விசாரணைக்காகக் தடுத்து வைக்கப்படுகிறார்.

இவ்விவகாரம் தொடர்பில் நாடு முழுவதும் 12 போலீஸ் புகார்கள் பெறப்பட்டதாக, புக்கிட் அமான் CID தலைவர் டத்தோ எம். குமார் கூறினார்.

3R எனப்படும் இனம், மதம், ஆட்சியாளர்கள் குறித்து நிந்தனைப் பதிவுகளைத் தவிர்க்குமாறு பொது மக்களை அவர் மீண்டும் எச்சரித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!