Latestமலேசியா

எலி சிறுநீர் தொற்று; உலு பெண்டுல் பொழுதுபோக்கு பூங்கா மே 17 ஆம்தேதிவரை மூடப்பட்டுள்ளது

சிரம்பான், மே 13 – கடந்த சனிக்கிழமை முதல், லெப்டோஸ்பைரோசிஸ்
( Leptospirosis )அல்லது எலி சிறுநீர் தொடர்பான மூன்று நோய்த்தொற்று சம்பவங்கள் மாவட்ட சுகாதார மையத்தின் தொற்றுநோய் கட்டுப்பாட்டுப் பிரிவுக்கு அறிவிப்புகள் வந்ததைத் தொடர்ந்து, கோலா பிலாவில் உள்ள உலு பெண்டுல் ( Ulu Bendul ) பொழுதுபோக்கு பூங்கா மே 17 ஆம்தேதிவரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

தொற்றின் பாதிப்புக்கு உள்ளான அனைவரும் பொழுதுபோக்கு பூங்காவில் எலி சிறுநீர் தொற்று அபாயம் உள்ள இடங்களுக்குச் சென்று வந்த பின்னணி இருப்பது விசாரணையில் கண்டறியப்பட்டதாக கோலா பிலா மாவட்ட சுகாதார அலுவலகத்தின் தொற்றுநோய் கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

விசாரணையின் முடிவில் , இந்த நோய்த்தொற்றுக்கு உள்ளானவர்கள் நான்கு முதல் 10 வயதுடைய ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து உறுப்பினர்கள் என கண்டறியப்பட்டது.

அவர்கள் அனைவரும் மே 1 ஆம் தேதி உலு பெண்டுல் பொழுதுபோக்கு பூங்கா நீரோடையில் காலை 10மணி முதல் மாலை 4 மணிவரை சுமார் ஆறு மணி நேரம் குளித்துள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!