Latestமலேசியா

லாபு 4 தமிழ்ப்பள்ளி புதிய வளாகத் திட்டம்: Matrix Concepts மூலம் 50% நிதி உறுதி – அருள் குமார்

லாபு, மே-26-மாணவர் பற்றாக்குறையையும் கட்டடப் பழமையையும் எதிர்கொண்டு வரும் லாபு தோட்டம் பிரிவு 4 தமிழ்ப்பள்ளியை, Nilai-Labu MVV City மேம்பாட்டுத் திட்டப் பகுதிக்கு மாற்றுவதற்காக, பள்ளியின் மேலாளர் வாரியமும் Matrix Concepts நிறுவனமும் இணைந்து ஒரு முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (MoC) மேற்கொண்டுள்ளன.

​கடந்தாண்டு ஜூன் மாதம் முதல் இதற்கான திட்டமிடல்கள் தொடங்கப்பட்ட நிலையில், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற மாநில ஆட்சிக்குழு கூட்டத்தில், புதிய பள்ளி கட்டுவதற்காக 6 ஏக்கர் நில உரிமம் வாரியத்திடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டது.

12 வகுப்பறைகள், 13 சிறப்பு அறைகள், உணவகம், திறந்தவெளி மண்டபம் மற்றும் இரண்டு பாலர் பள்ளி வகுப்பறைகள் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் அமையவிருக்கும் இப்புதிய பள்ளி வளாகத்திற்கு மொத்தம் 9 மில்லியன் ரிங்கிட் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

​இந்த 9 மில்லியன் ரிங்கிட் செலவில், குறைந்தபட்சம் 50 விழுக்காட்டுத் தொகையை Matrix Concepts நிறுவனம் ஏற்கும் என்றும், மீதமுள்ள தொகையைப் பள்ளி மேலாளர் வாரியம் ஏற்கும் என்றும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டம் வெற்றிகரமாகச் செயல்பட மத்திய அரசாங்கத்திடமிருந்தும், இதர தனியார் நிறுவனங்களிடமிருந்தும் தேவையான நிதி உதவிகளைப் பெற்றுத்தர முழு ஒத்துழைப்பு வழங்குவதாகப் போக்குவரத்து அமைச்சரும் சிரம்பான் நாடாளுமன்ற உறுப்பினருமான அந்தோணி லோக்கும் உறுதியளித்துள்ளார்.

இதனை, Matrix Concepts நிறுவனத்தின் இயக்குநர் டத்தோ ஸ்ரீ லீ தியான் ஓக், இன்று MoU கையெழுத்தான நிகழ்வுக்குப் பிறகுக் கூறினார்.

தனியார் மற்றும் சமுதாயப் பங்களிப்போடு இவ்வாறான திட்டங்களை முன்னெடுப்பது தமிழ்ப்பள்ளிகளின் கல்விச் சூழலை விரைவாக மேம்படுத்த உதவும் எனப் பள்ளி மேலாளர் வாரியத்தின் தலைவர் ஆர். நவஜீவன் நம்பிக்கை தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!