Latestமலேசியா

ஜோகூர் குடியிருப்புப் பகுதியில் குழந்தையின் சடலம் புதைக்கப்பட்டிப்பதாக பரவிய தகவல்; விசாரணையில் அதிர்ச்சி

ஜோகூர் பாரு, ஜூன்-3–குழந்தையின் சடலம் ஒன்று புதைக்கப்பட்டதாக பரவிய தகவலால் பரபரப்பான சூழலுக்கு தள்ளப்பட்ட ஜோகூர் ஸ்கூடாயில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதி இறுதியில் சிரிப்பில் முடிந்துள்ளது.

அப்பகுதி மக்கள் சந்தேகத்திற்கிடமான வகையில் ஒரு சிறிய மேடு அமைக்கப்பட்டிருந்ததையும், அதிலிருந்து துர்நாற்றம் வீசியதையும் தொடர்ந்து அது குழந்தையின் சடலமாக இருக்கலாம் என அச்சமடைந்து அதிகாரிகளிடம் தகவல் அளித்துள்ளனர்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸாரும் தொடர்புடைய அதிகாரிகளும் மேற்கொண்ட ஆய்வில், அங்கு புதைக்கப்பட்டிருந்தது குழந்தையின் சடலம் அல்ல; ஒரு பூனையின் சடலம் என்பதை உறுதி செய்தனர்.

இதனிடையே, இந்தச் சம்பவம் தொடர்பாக சமூக ஊடகங்களில் பல்வேறு ஊகங்களும் வதந்திகளும் பரவிய நிலையில், உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தாமல் தகவல்களை பகிர வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதனால் அப்பகுதி மக்களிடையே ஏற்பட்டிருந்த பதற்றம் தணிந்துள்ளதுடன், சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணை தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!