
சிலாங்கூர், ஜூன்-8-6 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு தந்த சிலாங்கூர், சபாக் பெர்னாமிலுள்ள ஒரு இடைநிலைப் பள்ளியின் 45 வயதான இசைக்கல்வி ஆசிரியர் ஒருவர், நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
மொத்தம் 14 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட நிலையில் அனைத்து குற்றச்சாட்டுகளையும் அவர் மறுத்துள்ளார்.
2025 முதல் 2026 வரை பள்ளியின் வகுப்பறை, இசை அறை மற்றும் பிற இடங்களில் இந்த சம்பவங்கள் நடந்ததாக கூறப்படுகிறது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் பிரம்படியும் விதிக்கப்படலாம்.
இந்நிலையில் நீதிமன்றம் 30,000 ரிங்கிட் ஜாமீன் விதித்ததுடன், சாட்சிகளைத் தொடர்புகொள்ளக் கூடாது என்றும் கடப்பிதழை ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு மீண்டும் ஜூலை 30-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.



