Latestமலேசியா

உலகக் கிண்ணக் காற்பந்து போட்டி: ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக நடவடிக்கை – ஃபாஹ்மி எச்சரிக்கை

கோலாலம்பூர், ஜூன் 8 – 2026 உலகக் கிண்ணக் காற்பந்து போட்டி தொடங்கவுள்ள நிலையில், ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான புகார்கள் கிடைத்தால் மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர் டத்தோ ஃபாஹ்மி ஃபட்சில் (Datuk Fahmi Fadzil) தெரிவித்துள்ளார்.

மலேசியாவில் ஆன்லைன் சூதாட்டம் அனுமதிக்கப்படாததால், பொதுமக்கள் சூதாட்டம் தொடர்பான இணைய இணைப்புகள் அல்லது உள்ளடக்கங்களைக் கண்டால் MCMC-க்கு புகார் அளிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும், ஆன்லைன் சூதாட்ட இணையத்தளங்கள் மற்றும் விளம்பரங்களுக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.

உலகக் கிண்ணப் போட்டிகளை முன்னிட்டு, கோடிக்கணக்கான ரிங்கிட் பரிசுத்தொகைகளை காட்டி சர்வதேச மற்றும் உள்ளூர் சூதாட்டக் கும்பல்கள் இணையம் வழியாக பணம் சேகரிக்க முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், சட்டவிரோத கால்பந்து சூதாட்ட நடவடிக்கைகளை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!