Latestமலேசியா

கோலாலம்பூரில் RM 7.8 மில்லியன் செலவில் 60 பொது கழிப்பறைகள் மேம்படுத்தப்படுகின்றன

கோலாலம்பூர், ஜூன்-8-கோலாலம்பூர் மாநகராட்சி மன்றமான DBKL, மூன்று நட்சத்திரங்கள் மற்றும் அதற்கு குறைவான தரமதிப்பீடு பெற்ற 60 பொது கழிப்பறைகளை மேம்படுத்த 7.8 மில்லியன் ரிங்கிட் தொகையை ஒதுக்கியுள்ளது.

மேயர் டத்தோ ஸ்ரீ ஃபட்லுன் மாக் உஜுட் (Datuk Seri Fadlun Mak Ujud) கூறுகையில், இந்த கழிப்பறைகளில் பெரும்பாலானவை பூங்காக்கள் மற்றும் பொது இடங்களில் அமைந்துள்ளன என்றார்.

கோலாலம்பூரில் மொத்தம் 168 பொது கழிப்பறைகள் உள்ளன. அவற்றில் 97 கழிப்பறைகள் மூன்று நட்சத்திரங்களுக்கு குறைவான தரமதிப்பீடு பெற்றுள்ளன.

முதற்கட்டமாக 60 கழிப்பறைகள் புதுப்பிக்கப்படவுள்ள நிலையில், மீதமுள்ள கழிப்பறைகள் அடுத்த ஆண்டு மேம்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.

மேலும், பொது கழிப்பறைகளை கலை, வடிவமைப்பு மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த அம்சங்களுடன் அழகுபடுத்தும் ‘KL Art Toilets’ திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் ஜாலான் மஸ்ஜிட் இந்தியா மற்றும் ஜாலான் சலோமா (Jalan Masjid India and Jalan Saloma) பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!