Latestமலேசியா

பெர்ச்சாத்துவுடனான உறவை முறித்த பாஸ் – முஹிடின் வருத்தம்

கோலாலம்பூர், ஜூன்-9- பாஸ் (PAS) கட்சி, பெர்சாத்துவுடனான (Bersatu) அரசியல் ஒத்துழைப்பை நிறுத்தியதற்கு, பெர்சாத்து கட்சியின் (Bersatu) தலைவர் முஹிடின் யாஸின் (Muhyiddin Yassin), வருத்தம் தெரிவித்துள்ளார்.

இந்த முடிவு பாஸின் சொந்த தீர்மானம் என்றும், பல ஆண்டுகளாக நம்பிக்கையுடன் உருவாக்கப்பட்ட உறவு முடிவுக்கு வந்திருப்பது பெரும் ஏமாற்றமளிப்பதாகவும் அவர் கூறினார்.

இருப்பினும், பெர்சாத்து தொடர்ந்து பெரிக்காதான் நேஷனல் (Perikatan Nasional) கூட்டணியை வலுப்படுத்தும் பணியில் ஈடுபடும் என்றும், கட்சித் தொண்டர்கள் கவனம் சிதறாமல் செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

முன்னதாக, பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் (Abdul Hadi Awang), வரவிருக்கும் மாநிலத் தேர்தல்கள் மற்றும் அடுத்த பொதுத் தேர்தலை முன்னிட்டு புதிய அரசியல் கூட்டணியை அமைக்கப் போவதாக அறிவித்திருந்தார்.

2020-ஆம் ஆண்டு இணைந்து உருவாக்கப்பட்ட பெரிக்காத்தான் நேஷனல் (Perikatan Nasional) கூட்டணியில் தற்போது பாஸ் மற்றும் பெர்சாத்து இடையேயான அரசியல் உறவு முடிவுக்கு வந்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!