
ஜார்ஜ் டவுன், ஜூன் 16 – பினாங்கில் இவ்வாண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரை நடத்தப்பட்ட ஆய்வுகளில், 177 உணவகங்கள் சுகாதார மற்றும் உணவு பாதுகாப்பு விதிகளை மீறியதால் தற்காலிகமாக மூடப்பட்டன.
மொத்தம் 4,069 உணவகங்கள் சோதிக்கப்பட்டதில், 4.3 விழுக்காடு இடங்களில் குறைபாடுகள் கண்டறியப்பட்டன.
பூச்சி தொற்று, தூய்மை குறைபாடு மற்றும் உணவு விஷவாத சம்பவங்கள் முக்கிய காரணங்களாக இருந்தன.
அதிகாரிகள், இந்த நடவடிக்கை தண்டனை அல்ல என்றும், உணவகங்களை மேம்படுத்துவதற்காகவே மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்தனர்.



