Latestமலேசியா

அம்பாங் வணிக வளாக வாகன நிறுத்தத்தில் பயங்கர தீ விபத்து: Alphard, BMW உட்பட 3 ஆடம்பர கார்கள் கருகின

அம்பாங், ஜூன்-19-அம்பாங்கில் உள்ள பிரபல வணிக வளாகமொன்றின் திறந்தவெளி வாகன நிறுத்தப் பகுதியில், நேற்றிரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் Toyota Vellfire/Alphard மற்றும் BMW உள்ளிட்ட 3 ஆடம்பர வாகனங்கள் எரிந்து சாம்பலாகின.

​Lotus’s Ampang வளாகத்தில் நிகழ்ந்த இச்சம்பவம் குறித்து, இரவு 8.35 மணியளவில் தங்களுக்கு அவசர அழைப்பு வந்ததாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

​இதனைத் தொடர்ந்து, பண்டான் இண்டா மற்றும் அம்பாங் தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த 14 வீரர்கள் அடங்கிய குழுவினர், அடுத்த 7 நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

​இரண்டு தீயணைப்பு வாகனங்களின் உதவியோடு, இரவு 8.43 மணியளவில் தீ முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

​இந்த விபத்தில் Vellfire முற்றிலும் கருகிய நிலையில், BMW மற்றும் ஒரு Honda வாகனங்கள் 80 விழுக்காடு தீக்கிரையாகின.

அதிர்ஷ்டவசமாக, இச்சம்பவத்தில் யாருக்கும் காயங்களோ அல்லது உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை.

​தீ விபத்துக்கான காரணம் மற்றும் இழப்பீட்டு மதிப்பு குறித்து தீயணைப்புத் துறையின் தடயவியல் பிரிவு தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!