
ம.இ.கா. இந்திய இளஞர்களின் எதிர்கால நலனில் எப்போதும் அக்கறையும் கடப்பாடும் கொண்டுள்ளது. அவ்வகையில் அவர்களின் கல்வி மற்றும் விளையாட்டுத் துறை சாதனைகளுக்கு நாடளாவிய நிலையில் தொடர்ந்து முன்னெடுப்புகளையும் மேற்கொண்டு வருகிறது.
கல்வி முன்னேற்றத்திற்காக மாணவர்களுக்கு நிதியுதவிகள் வழங்கப்பட்டு வருவதோடு, இளைஞர்களின் விளையாட்டு மற்றும் வாழ்வியல் முன்னேற்றத்திற்காக பல்வேறு பயிற்சியும் மேம்பாட்டு திட்டங்களும் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக பேரா ம.இ.கா.இளைஞர் பகுதி துணைத்தலைவர் அர்விந்த் அப்பளசாமி தெரிவித்திருக்கிறார்.
நேற்று பாகான் டத்தோ தொகுதியில் ம.இ.காவின் 80ஆம் நிறைவு விழாவை முன்னிட்டு நடைபெற்ற தான் ஸ்ரீ விக்னேஸ்வரன் கிண்ண போட்டி விளையாட்டில் வெற்றியாளர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்வில் இதனைத் தெரிவித்தார்.
வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள், கோப்பைகள் மற்றும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன
புட்சால் பூப்பந்து, கூடை பந்து போட்டிகள் நடத்தப்பட்டது். இப்போட்டியில் சுமார் 500 பேர் கலந்துக்கொண்டனர் .
இதன் பரிசளிப்பு விழா பாகான் டத்தோவில் உள்ள சன்மார்க் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் 55 பேருக்கு அங்கீகாரமும் பாராட்டும் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
விளையாட்டுத் துறையில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் வீரர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் பங்களிப்பை மதித்து இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்திய இளைஞர்கள் விளையாட்டுத் துறையில் ஆர்வம் குறைந்து வருவதாக சிலர் கூறினாலும், அது முழுமையாக உண்மையல்ல என்பதை இந்நிகழ்வு நிரூபிக்கிறது.
பல இளைஞர்கள் தொடர்ந்து விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கி வருகின்றனர். அவர்களுக்கு ஊக்கமளித்து, அவர்களின் திறமைகளை வெளிக்கொணர்வதில் ம.இ.கா முக்கிய பங்காற்றி வருகிறது.
ஒரு காலத்தில் சந்தோஷ் சிங், ஆறுமுகம், நந்தகுமார் போன்ற இந்திய வீரர்கள் நாட்டின் விளையாட்டுத் துறையில் சிறப்பாக சாதனை படைத்தனர்.
அந்தப் பொற்காலம் மீண்டும் திரும்ப வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது. அதற்காக தேசிய அளவிலும், மாநில அளவிலும் ம.இ.கா. இளைஞர்களுக்கு தேவையான ஆதரவு மற்றும் வாய்ப்புகளை தொடர்ந்து வழங்கி வருகிறது.
விளையாட்டுத் துறையில் ஈடுபடும் இளைஞர்களுக்கு போட்டி வசதிகள், பயிற்சி வாய்ப்புகள், அடிப்படை கட்டமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது்.
சிறிய தேவைகளிலிருந்து பெரிய திட்டங்கள் வரை, இளைஞர்களின் வளர்ச்சிக்காக ம.இ.கா.தொடர்ந்து பாடுபட்டு வருகிறது.
அதேவேளை, தமிழ்ப்பள்ளி மாணவர்களும் விளையாட்டுத் துறையில் அதிகளவில் பங்கேற்று சாதிக்க வேண்டும் என்பதில் ம.இ.கா.உறுதியாக உள்ளது.
கல்வியிலும் விளையாட்டிலும் திறமைகளை வெளிப்படுத்தும் இந்திய மாணவர்களுக்கு தேவையான ஊக்கமும் ஆதரவும் தொடர்ந்து வழங்கப்படும் என அர்வின் அப்பளசாமி தெரிவித்தார்.
மஇகா ஒரு ஆலமரம் போன்றது. அதன் நிழலில் சமூகத்தின் அனைத்து தரப்பினரும் வளர வேண்டும் என்பதே ம.இ.காவின் நோக்கம்,” என அவர் தெரிவித்தார்.
அதன் அடிப்படையில் இன்றி அல்ல அனைத்து காலங்களிலும் ம.இ.கா. இந்தியர்களின் நன்மைக்கு பாடுபட்டு வருகிறது.
தேர்தல். காலங்களில மட்டும் செல்படுகின்ற கட்சி அல்ல ம. இ.கா.
அரசாங்கத்தில் ம.இ.கா அரசு்பொறுப்புகள் வகிக்கா விட்டாலும் தொடர்ந்து அதன் சேவை வழங்கி வருவதாக அவர் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர் , ம.இ.கா ஏற்பாட்டில் நடைபெற்ற ஃபுட்சால் மற்றும் பேட்மின்டன் போட்டிகளில் இந்தியர்கள் மட்டுமன்றி மலாய்க்காரர்கள், சீனர்கள் உள்ளிட்ட பல இனங்களைச் சேர்ந்த இளைஞர்களும் ஆர்வத்துடன் பங்கேற்றதாக அவர் குறிப்பிட்டார்.
எதிர்பார்த்ததை விட இருமடங்கு அதிகமான அணிகள் கலந்து கொண்டிருப்பது இளைஞர்களிடையே உருவாகியுள்ள எழுச்சியையும் ஒற்றுமையையும் வெளிப்படுத்துவதாக அவர் கூறினார்.
மேலும், “இது தற்காலிக புகழுக்காக மேற்கொள்ளப்படும் செயல் அல்ல. கடந்த ஐந்து ஆண்டுகளாக வெற்றி, தோல்வி எதுவாக இருந்தாலும் மக்களுக்கான சேவையை இடைவிடாது முன்னெடுத்து வருகிறோம். வீடு வீடாகச் சென்று மக்களின் தேவைகளை அறிந்து உதவி செய்து வருவதால், இளைஞர்களின் ஆதரவும் மக்களின் ஒத்துழைப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது,” என்றார்.
இந்த நிகழ்வு, மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்கால முன்னேற்றத்திற்காக மஇகா தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் அமைந்தது.



