Latestமலேசியா

உலகின் சிறந்த 7 பல்கலைக்கழகங்களில் USM, UKM இடம்பிடிப்பு

கோலாலம்பூர், ஜூன்-25,

நாட்டின் உயர்கல்வித் துறைக்கு உலக அரங்கில் மேலும் ஒரு பெருமையாக, 2026 Times Higher Education தாக்க மதிப்பீடு பட்டியலில், USM மற்றும் UKM ஆகியவை உலகின் சிறந்த 7 பல்கலைக்கழகங்களில் இடம்பிடித்துள்ளன.

இதில் 1,600-க்கும் மேற்பட்ட உயர்கல்வி நிறுவனங்கள் மதிப்பீடு செய்யப்பட்ட நிலையில், USM உலகளவில் 5-ஆவது இடத்தையும், UKM 7-ஆவது இடத்தையும் பெற்றுள்ளன.

ஐநா சபையின் நிலையான வளர்ச்சி இலக்குகளை முன்னெடுத்துச் செல்வதில் இப்பல்கலைக்கழகங்கள் ஆற்றிய பங்களிப்பே இந்த சாதனைக்கு காரணமாகும்.

மேலும், ‘SDG 17: இலக்கை நோக்கிய பங்காளித்துவப்’ பிரிவில் USM தொடர்ந்து உலகின் முதலிடத்தைத் தக்க வைத்துள்ளதாக உயர் கல்வி அமைச்சர் டத்தோ ஸ்ரீ Dr சாம்ரி அப்துல் காடிர் தெரிவித்தார்.

இந்த வெற்றி, கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சியில் மட்டுமல்லாமல், சமூக நலன் மற்றும் உலகளாவிய நிலையான வளர்ச்சிக்கும் மலேசியப் பல்கலைக்கழகங்கள் வழங்கி வரும் முக்கிய பங்களிப்பை வெளிப்படுத்துவதாக அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!