
தாய்லாந்து, ஜூன் 29 – தாய்லாந்தின் தக் பாய் மாவட்டம், கம்போங் சாபோம் (Kampung Sapom, Tak Bai, Thailand) பகுதியில் இன்று நிகழ்ந்த குண்டுவெடிப்பில் சிக்கிய மலேசியர் பலத்த காயமடைந்துள்ளார்.
38 வயதான அந்த நபர் ஓட்டிச் சென்ற புரோட்டான் X50 வாகனம் வெடிப்பில் சேதமடைந்ததுடன், அவரது உடலிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளதால் தற்போது அந்நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சாலையோரத்தில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் வாகனம் சிக்கியதென்றும் காயமடைந்தவர் சபா மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும், கிளந்தான் போலீஸ் உறுதிப்படுத்தியுள்ளது.
குண்டு வாகனத்தில் பொருத்தப்பட்டதா அல்லது சாலையோரத்தில் வைக்கப்பட்டதா என்பது குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.



