Latestமலேசியா

கோம்பாக்கில் நேரலையின் போது உள்ளே புகுந்த அதிகாரிகள்: போலிப் பொருட்களை விற்ற நபர் அதிரடி கைது

கோம்பாக், ஜூலை-3-கோம்பாக்கில் சமூக ஊடகத்தில் நேரடி ஒளிபரப்பு மூலம் வியாபாரம் செய்து கொண்டிருந்த வணிகர் ஒருவரின் வளாகத்தை, உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சான KPDN-னின் அதிகாரிகள் அதிரடியாகச் சோதனையிட்டுள்ளனர்.

​போலி முத்திரை பதித்த ஆடம்பரப் பொருட்களை விற்பனை செய்வதாகக் கிடைத்த புகார்களின் அடிப்படையில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது.

அதிகாரிகள் உள்ளே நுழைந்தபோது, சம்பந்தப்பட்ட நபர் போலிப் பொருட்களை வாடிக்கையாளர்களுக்குக் காண்பித்து நேரலையாக விற்றுக் கொண்டிருந்தார்.

​உடனடியாக அந்த நேரடி ஒளிபரப்பை நிறுத்திய அதிகாரிகள், அங்கிருந்த ஆயிரக்கணக்கான ரிங்கிட் மதிப்புள்ள போலி கைப்பை மற்றும் ஆடைகளை பறிமுதல் செய்தனர்.

2019-ஆம் ஆண்டு வர்த்தக முத்திரைச் சட்டத்தின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வரும் வேளை, போலிப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என KPDN எச்சரித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!