
கங்கார், ஜூலை-8 – பெர்லிஸில், 34.23 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கலந்த வேப் கலன்களை (cartridge) போலீஸார் அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய 38 முதல் 68 வயதுடைய மூவரை போலீஸார் கைதுச் செய்துள்ளனர்.
ஜூலை 1 முதல் 3-ஆம் தேதி வரை பெர்லிஸின் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில், furanylfentanyl எனும் போதைப்பொருள் கலந்த வேப் திரவங்கள் மற்றும் கலன்கள் கைப்பற்றப்பட்டன.
மொத்தம் 228.75 லிட்டர் வேப் திரவம் மற்றும் ஆயிரக்கணக்கான கலன்கள் பறிமுதலாகின.
இது சுமார் 457,000 பயனர்களுக்கு போதுமான அளவு போதைப்பொருளாகும் என, மாநில போலீஸ் தலைவர் Muhammad Abdul Halim தெரிவித்தார்.
கைதுச் செய்யப்பட்டவர்களில் ஒரு தாய்லாந்து நாட்டுப் பெண்ணும் அடங்குவார்; மற்ற இருவரும் உள்ளூர்வாசிகள்.
அவர்களில் இருவருக்கு ஏற்கனவே போதைப்பொருள் கடத்தல் தொடர்பான குற்றப் பின்னணி இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தக் கும்பலானது, கிடங்குகள் மற்றும் குடியிருப்பு வீடுகளைப் போதைப்பொருள் கடத்தலுக்கான transit மையங்களாகப் பயன்படுத்தி, அங்கிருந்து அண்டை நாடுகளுக்குக் கடத்திச் சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து, அபாயகர போதைப்பொருள் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுச் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.



