Latestமலேசியா

நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் பெர்சாத்து சொந்தச் சின்னத்தைப் பயன்படுத்தும்

பெட்டாலிங் ஜெயா, ஜூலை.16-16வது நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில், பெர்சாத்து தனது சொந்தக் கட்சிச் சின்னத்தையே பயன்படுத்தும். பெரிகாத்தான் நேஷனல் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சு வார்த்தை காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டதாலும், அதில் கலந்து கொள்வதில் இருந்து பெர்சாத்து கட்சி விலக்கப்பட்டதாலும் அம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பாரிசான் நேஷனலுடனான அரசியல் ஒத்துழைப்பைத் தொடர பாஸ் எண்ணியுள்ளதால் இம்மாதம் 12 ஆம் தேதி நடைபெற்ற நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தைக் குழுவின் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டதாக பெர்சாத்து தலைவர் Tan Sri Muhyiddin Yassin விளக்கினார்.

அவ்விவகாரம் முதலில் Perikatan Nasional உச்ச மன்றத்தில் விவாதிக்கப்பட்டு ஒப்புக் கொள்ளப்பட வேண்டும் என்பதே Bersatuவின் நிலைப்பாடு. அது கூட்டணியின் கொள்கைகள் மற்றும் திசையை உள்ளடக்கியது. எனினும் துரதிர்ஷ்டவசமாக Perikatan Nasional உச்சமன்றம் இன்னும் கூட்டப்படவில்லை.

அதோடு PN கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடுகளை இறுதி செய்வதற்கான புதிய தேதியும் அறிவிக்கப்படாமல் கூட்டமும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல் நடைபெறவிருக்கு நிலையில், இவ்வாறான சூழ்நிலை ஏற்பட்டிருப்பது மிகவும் வருந்தத்தக்கது மற்றும் PN அரசியலமைப்பிற்கு முரணானது என Muhyiddin சுட்டிக் காட்டினார்.

நேற்று கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற பெர்சாத்து உச்ச தலைமைத்துவ மன்றக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய பின் அவர் செய்தியாளர்களிடம் அவ்வாறு கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!