
பெந்தோங், ஜூலை-25-பஹாங், பெந்தோங் ஜாலான் காராக் லாமா, ஜம்பு ரியாஸ் சுகாதார கிளினிக் அருகில் இன்று அதிகாலை நிகழ்ந்த கோர சாலை விபத்தில் ஆறு பேர் உயிரிழந்தனர்.
15 முதல் 25 வயதிலான அவர்கள் பயணம் செய்த Toyota Vios காரும், 1 டன் லாரியும் மோதிக் கொண்டன.
அதிகாலை 4.24 மணியளவில் அவசர அழைப்பு வந்ததாக தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் தெரிவித்தனர்.
அவர்கள் சம்பவ இடத்திற்குச் சென்றபோது, காரில் பயணம் செய்த அனைவரும் பலத்த காயமடைந்து நொறுங்கிய வாகனத்திற்குள் சிக்கியிருந்தது கண்டறியப்பட்டது.
எனினும், சம்பவ இடத்திற்கு வந்த சுகாதாரத்துறை அதிகாரிகள், பாதிக்கப்பட்ட அனைவரும் உயிரிழந்துவிட்டதாக உறுதிப்படுத்தினர்.
அவர்கள் முறையே 25 வயது V முகிலன், 21 டினேஸ்வரன், 20 வயது அழகநாதன், 18 வயது A கணபதி ராஜா, 16 வயது S K கிஷன் மற்றும் 15 வயது M பரந்தாமன் என அடையாளம் காணப்பட்டனர்.
31 வயது லாரி ஓட்டுநர் Muhamad Hanafi Ahmad QRaju காயங்களுடன் மீட்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
காராக் மற்றும் மெந்தாகப் தீயணைப்பு நிலையங்களின் மீட்புப் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன.
இந்தத் துயரச் சம்பவத்திற்கான உண்மைக் காரணத்தைக் கண்டறிய தீவிர விசாரணை நடந்து வருகிறது.



