Latestமலேசியா

F1 மீண்டும் மலேசியாவில்; அக்டோபரில் செப்பாங் பந்தயத் தளத்தை அதிர வைக்கப் போகும் பஹ்ரேய்ன் GP

புத்ராஜெயா, ஜூலை-27-உலகப் புகழ்பெற்ற F1 கார் பந்தயம் மீண்டும் மலேசியா திரும்புகிறது.

மத்தியக் கிழக்கில் ஏற்பட்ட இராணுவ பதற்றங்கள் காரணமாக, பஹ்ரேய்ன் மற்றும் சவூதி அரேபியாவில் ஒத்திவைக்கப்பட்ட போட்டிகள் தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன.

இதையடுத்து அக்டோபர் 2 முதல் 4 வரை பஹ்ரேய்ன் GP பந்தயம் SIC எனப்படும் செப்பாங் பந்தயத் தளத்தில் நடைபெறவுள்ளது.

​இதன் மூலம் 2017-ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக F1 பந்தயம் மீண்டும் மலேசியாவுக்குத் திரும்புகிறது.

​மலேசியாவின் உள்கட்டமைப்பு மற்றும் திறனை நம்பி இந்த வாய்ப்பை வழங்கியதற்காக, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பஹ்ரேய்ன் இளவரசருக்கும் F1 நிர்வாகத்திற்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

F1 தலைமை நிர்வாகி Stefano Domenicali, உலகின் மிகவும் புகழ்பெற்ற இந்த SIC தளத்திற்கு இரசிகர்கள் மீண்டும் திரும்புவது மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!