Latestமலேசியா

சாரா கைரினா வழக்கு: ஷஃபிக்கு 5 வார சிறை; மேல்முறையீட்டால் தண்டனை நிறுத்திவைப்பு

கோத்தா கினபாலு, ஜூலை-29-சபாவில் மாணவி Zara Qairina Mahathir மரணம் குறித்த விசாரணை தொடர்பில் கருத்துகள் வெளியிட்டு நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக முன்னாள் முதலமைச்சர் Datuk Seri Shafie Apdalலுக்கு ஐந்து வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இருப்பினும், Warisan கட்சியின் தலைவரான Shafie Apdal, மேல்முறையீடு செய்யும் வரை, அத்தண்டனையை ஒத்தி வைக்க கோத்தா கினபாலு sessions நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

1948 ஆம் ஆண்டு கீழ்நிலை நீதிமன்றங்கள் சட்டத்தின் பிரிவு 99A-இன் கீழ், Shafie Apdalலுக்கு எதிரான வழக்கை அரசுத் தரப்பு சந்தேகத்திற்கு இடமின்றி வெற்றிகரமாக நிரூபித்துள்ளதாக முன்னதாக நீதிபதி Amir Shah Amir Hassan தமது தீர்ப்பில் தெரிவித்தார். குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஆறு வாரங்கள் வரை சிறைத்தண்டனை, அதிகபட்சமாக 300 ரிங்கிட் அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

கடந்தாண்டு சமூக ஊடகங்களில் Shafie Apdal வெளியிட்ட கருத்து தொடர்பான காணொளி வைரலாகி பரவலான கவனத்தை ஈர்த்தது.

Paparரில் உள்ள Tun Datu Mustapha சமய இடைநிலைப் பள்ளி விடுதியின் தரைத் தளத்தில், 13 வயதான Zara Qairina எனும் மாணவி சுயநினைவற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அவர் மறுநாள் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

Zara Qairinaவின் மரணத்திற்கான காரணத்தை விசாரிக்க கடந்த ஆண்டு செப்டம்பர் 3-ஆம் தேதி முதல் விசாரணை நடைபெற்று வருகிறது. அவ்வழக்கு விசாரணை ஆகஸ்ட் 24-ஆம் தேதி மீண்டும் தொடரவுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!