Latestமலேசியா

‘Kuil Haram’ விவகாரம்: வருத்தம் தெரிவித்துப் மன்னிப்பு கேட்ட பிரதமர் அன்வார்

ஆலய விவகாரங்கள் குறித்த தமது முந்தைய கருத்துகளுக்காக பிரதமர் வருத்தம் தெரிவித்தார்.

“கோயிலை ‘kuil haram’ என நான் சொல்லியிருந்தால், அதற்கு நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். அது ஒரு தொழில்நுட்பக் குறைபாடுதான். அந்தத் தவறை நான் ஏற்றுக்கொள்கிறேன்” என்றார் அவர்.

ஆனால், தமது அரசாங்கம் பழையக் கோயில்களை இடித்ததில்லை என்றும் நீதியுடன் ஆட்சி நடத்துவதில் உறுதியாக இருப்பதாகவும் அன்வார் கூறினார்.

இறுதியாக, இனவாத அரசியல் பேச்சுகளையும் பிளவுப்படுத்தும் கருத்துகளையும் மக்கள் புறக்கணிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட பிரதமர், அரசாங்கத்தைச் செயல்களின் மூலமே மதிப்பிட வேண்டும் என வலியுறுத்தினார்.

டத்தோ ஸ்ரீ ரமணன் உள்ளிட்ட இந்தியச் சமூக பிரதிநிதிகளும் பொது மக்களும் என இந்த மக்கள் சந்திப்பில் பெருந்திரளானோர் பங்கேற்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!