
பெட்டாலிங் ஜெயா, ஜூலை 30 – தேசிய இருதய நிறுவனமான IJN-இன் துறைத் தலைவருக்கு எதிராக, மருத்துவர்கள் உட்பட பல பெண் ஊழியர்கள் பாலியல் தொந்தரவு குற்றச்சாட்டில் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
புகார்கள் சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் புகாரை வாப்பஸ் பெற மறுத்துள்ளதுடன், சட்ட ஆலோசனையும் பெற்று வருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் முழுமையாக ஒத்துழைத்து வருவதாகவும் IJN தெரிவித்துள்ளது.



