
கிளாஸ்கோவ், ஆகஸ்ட்-1-2010 டெல்லி காமன்வெல்த் போட்டியில் கைநழுவிய தங்கப் பதக்கத்திற்குப் பிறகு, 16 ஆண்டுகள் கழித்து மலேசியாவின் உள்ளரங்கு சைக்கிளோட்டப் புயல் டத்தோ அசிசுல் ஹஸ்னி அவாங் தனது கனவுத் தங்கத்தை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் ஆண்களுக்கான Keirin இறுதிப் போட்டியில், ‘The Pocket Rocketman’ என அன்போடு அழைக்கப்படும் 38 வயதான அசிசுல், தனது அபார யுக்தியால் முந்திச் சென்றார்.
கடைசி சுற்றில் ஆஸ்திரேலியாவின் Leigh Hoffman-மனை முந்திக்கொண்டு முதலிடம் பிடித்து சாதனை படைத்தார்.
Hoffman வெள்ளியும், இங்கிலாந்தின் Harry Ledingham-Horn வெண்கலமும் வென்றனர்
தனது கடைசி காமன்வெல்த் தொடரில், 16 ஆண்டுகால போராட்டத்திற்குப் பின் முதல் தங்கப் பதக்கத்தை வென்ற மகிழ்ச்சியில் அசிசுல் ஹஸ்னி ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.
2010 போட்டியில் தொழில்நுட்பத் தவறால் தங்கம் பறிக்கப்பட்டு, 2014-ல் வெண்கலம் வென்றவர் அசிசுல்.
இந்நிலையில், மலேசிய விளையாட்டு உலகின் இணையற்ற நாயகனாக வலம் வரும் இவருக்கு, இந்த கிளாஸ்கோ தங்கப் பதக்கம் ஒரு பொன்னான பிரியாவிடையாக அமைகிறது…



