Latestமலேசியா

தேசிய ஒற்றுமையை வலுப்படுத்த DARES@Komuniti திட்டம் அறிமுகம்; 12 சமூக மத்தியஸ்த மையங்கள் உருவாக்கம்

பட்டவொர்த், ஆகஸ்ட்-1-தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு, ‘DARES@Komuniti’ என்ற தேசிய அளவிலான சமூக அமைதி மற்றும் அனுதாப கலந்துரையாடல் திட்டத்தை பினாங்கு மாநிலத்தில் நடத்தியுள்ளது.

இத்திட்டத்தை அமைச்சர் டத்தோ ஏரன் அகோ டகாங் பட்டவொர்த்தில் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.

சமூக ஒருங்கிணைப்பை வலுப்படுத்தவும், அமைதியான முறையில் முரண்பாடுகளைத் தீர்க்கும் கலாச்சாரத்தை ஊக்குவிக்கவும் இத்திட்டம் இலக்கு கொண்டுள்ளதாக அவர் சொன்னார்.

பினாங்கு தவிர்த்து, ஜோகூர், சிலாங்கூர், லாபுவான் மற்றும் கிளந்தான் ஆகிய இடங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்த AI அதி நவீன காலத்தில், சமூக வலைத் தளங்களில் பொய்ப் பிரசாரங்கள் மற்றும் வெறுப்பு பேச்சுகளைத் தடுக்க அதிகமான ‘டிஜிட்டல் ஒற்றுமை தூதர்கள்’ உருவாக வேண்டும் என்றும் டத்தோ ஏரன் வலியுறுத்தினார்.

இதனிடையே, சமூக தகராறுகளைத் தீர்க்க 12 புதிய ‘சமூக மத்தியஸ்த மையங்கள்’ கட்டம் கட்டமாக உருவாக்கப்படவுள்ளன.

2017 முதல் 2025 வரை, இந்த அமைப்பின் மூலம் 1,273 சமூகப் புகார்கள் வெற்றிகரமாகத் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!