
கென்பேரா, ஆகஸ்ட்.04-தென் ஆஸ்திரேலியாவின் தென்கிழக்குக் கடற்கரைக்குப் பகுதியில் உள்ள ஒரு தீவில் 80-க்கும் மேற்பட்ட greater crested tern வகை பறவைகள் மடிந்த மற்றும் நோய்வாய்ப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, அது குறித்து மாநில அதிகாரிகள் விசாரித்து வருவதாக சின்ஹுவா செய்திகள் கூறுகின்றன. அப்பறவைகளுக்கு H5 வகை பறவைக் காய்ச்சல் தொற்று ஏற்பட்டிருந்ததா என்பதைக் கண்டறிய பரிசோதனைகள் நடைபெற்று வருவதாக அண்மையில் ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கழகம் ABC அண்மையில் தகவல் வெளியிட்டிருந்தது.
Cape Jaffnaவில் இருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர் தெற்கே உள்ள Business Rocks பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட வான்வழிக் கண்காணிப்பில் 49 இறந்த மற்றும் 35 நோய்வாய்ப்பட்ட greater crested tern பறவைகள் கண்டறியப்பட்டன. ஆய்வக முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் அப்பறவைகளுக்கு H5 தொற்று இல்லை என பரிசோதனையில் தெரிய வரலாம் எனக் கூறப்படுவது மிகவும் சாத்தியமற்றது என தலைமை கால்நடை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் உறுதிப்படுத்தப்பட்ட 53 H5 பறவைக் காய்ச்சல் சம்பவங்களில் 39 தென் ஆஸ்திரேலியாவில் பதிவாகியுள்ளன. விவசாயம் மற்றும் மனிதர்களுக்கு அதனால் ஏற்படும் ஆபத்து குறைவே எனக் கூறப்படுகிறது.



