Latestஇந்தியாஉலகம்

காற்றுக் கொந்தளிப்பால் ஏர் இந்தியா விமானத்தில் திடீர் குலுக்கம்: 17 பேர் காயம்

புக்கெட், ஆகஸ்ட்-5,தாய்லாந்தின், புக்கெட்டிலிருந்து புது டெல்லி நோக்கி வந்த ஏர் இந்தியா விமானம் கடுமையான காற்றுக் கொந்தளிப்பில் சிக்கி குலுங்கியதில், 17 பேர் காயமடைந்துள்ளனர்.

செவ்வாய்க்கிழமை 137 பயணிகள் மற்றும் 8 பணியாளர்களுடன் பயணித்த AI379 இரக ஏர் இந்தியா விமானம், வான்வெளியில் பறந்துகொண்டிருந்தபோது திடீரென உயரத்தை இழந்தது.

இதன் காரணமாக விமானம் பயங்கரமாகக் குலுங்கியதில், பயணிகள் சிலர் மேலேயிருந்த கூரையில் மோதி காயமடைந்தனர்.

​இருப்பினும், விமானி திறம்படச் செயல்பட்டு விமானத்தைப் பாதுகாப்பாக புது டெல்லி விமான நிலையத்தில் தரையிறக்கினார்.

காயமடைந்த 13 பயணிகள் மற்றும் 4 பணியாளர்கள் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டனர்.

நல்ல வேளையாக யாருக்கும் பலத்த காயம் ஏற்படவில்லை.

இந்தத் திடீர் அசம்பாவிதம் குறித்து இந்திய பொது விமான போக்குவரத்து தலைமையகம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.

விமானத்தின் கருப்புப் பெட்டி கைப்பற்றப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!