Latestமலேசியா

திரெங்கானுவில் ஆட்டிசம் சிறுவன் கடலில் மூழ்கி உயிரிழப்பு

திரெங்கானு, ஆகஸ்ட் 6 – திரெங்கானு பந்தாய் குவாலா கெர்த்தே (Pantai Kuala Kerteh) கடற்கரையில் அலைகளில் அடித்துச் செல்லப்பட்ட ஆறு வயது ஆட்டிசம் பாதிப்பு கொண்ட சிறுவன், தேடுதல் பணியின் போது மாலை 5.43 மணியளவில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

கடைசியாக மணலில் விளையாடிக் கொண்டிருந்த இடத்திலிருந்து சுமார் 30 மீட்டர் தொலைவில் பொதுமக்கள் அவரது உடலை மீட்டனர். பிற்பகல் 3.43 மணியளவில் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்துக்கு வந்த மருத்துவக் குழு சிறுவன் உயிரிழந்ததை உறுதிப்படுத்தியதையடுத்து, உடல் உடற்கூறு பரிசோதனைக்காக கெமாமான் மருத்துவமனை (Kemaman Hospital) தடயவியல் பிரிவுக்கு அனுப்பப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!