Latestஇந்தியாஉலகம்

இந்தியாவில் 9 மாத குழந்தையின் வாயில் பசை ஊற்றிய அத்தை மீது வழக்கு பதிவு

இந்தியா, ஆகஸ்ட் 6 – இந்தியாவின் புனேவில், ஒன்பது மாத குழந்தையின் வாயில் உடனடி ஒட்டும் பசை ஊற்றியதாகக் கூறப்படும் சம்பவத்தில், குழந்தையின் அத்தை மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடும்பத் தகராறைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. குழந்தை வாந்தி எடுத்ததுடன், அதன் உதடுகள் ஒட்டிக்கொண்டதை தாய் கவனித்ததை அடுத்து, உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டது.

போலீசார் தெரிவிக்கையில், குழந்தையின் உடல்நிலை தற்போது சீரடைந்து வருகிறது. சம்பவம் தொடர்பாக மேலும் இருவர் குடும்பத்தினரை மிரட்டியதாகக் கூறப்படுவதால், மூவருக்கு எதிராக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!