Latestமலேசியா

சிலாங்கூர் செமிஞ்ஞியில் வெளிநாட்டு பெண் லாரி மோதி உயிரிழப்பு

காஜாங், ஆகஸ்ட் 7 – சிலாங்கூர் ஜாலான் செமிஞ்ஞி (Jalan Semenyih) பகுதியில் நேற்று மாலை 7.30 மணியளவில் சாலையைக் கடக்க முயன்ற 41 வயதுடைய வெளிநாட்டு பெண் ஒருவர் எல்பிஜி (LPG) எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிச் சென்ற லாரி மோதி உயிரிழந்தார்.

போலீசார் தெரிவித்ததாவது, 36 வயதுடைய உள்ளூர் லாரி ஓட்டுநர் செமிஞ்ஞியிலிருந்து எக்கோஹில் (Ecohill) நோக்கி எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்கச் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அருகிலிருந்த பல்பொருள் அங்காடி பகுதியிலிருந்து சாலையைக் கடக்க முயன்ற பெண்ணை லாரி ஓட்டுநரால் தவிர்க்க முடியாமல் மோதியதாக கூறப்படுகிறது.

தலையில் பலத்த காயம் அடைந்த அந்தப் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக மருத்துவப் பணியாளர்கள் உறுதி செய்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக, சாலைப் போக்குவரத்து சட்டத்தின் கீழ், ஆபத்தான அல்லது கவனக்குறைவான வாகன ஓட்டத்தால் மரணம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்தவர்கள் அருகிலுள்ள காவல் நிலையத்தை தொடர்புகொள்ளுமாறு போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!