Latestமலேசியா

தமிழ் மற்றும் சீனப் பள்ளிகளுக்கு அடுத்த இரண்டு வாரங்களில் சிறப்பு நிதி அறிவிப்பு — பிரதமர் அன்வார் தகவல்

அலோர் காஜா, ஆகஸ்ட்-8-,நாட்டிலுள்ள தமிழ் மற்றும் சீனப் பள்ளிகளுக்குச் சிறப்பு அரசாங்க நிதியுதவி அறிவிக்கப்படவுள்ளது.

மலாக்கா அலோர் காஜாவில் நடைபெற்ற ‘Gelombang MADANI’ நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அதனை அறிவித்தார்.

அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் சமமான ஆதரவை வழங்க மடானி அரசாங்கம் உறுதியளித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

சீன மற்றும் தமிழ்ப் பள்ளிகளுக்கான அங்கீகரிக்கப்பட்ட இந்தச் சிறப்பு நிதி தொடர்பான விவரங்கள், அடுத்த 2 வாரங்களுக்குள் தனியாக நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சி மூலம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.

ஒவ்வொரு கல்வி முறையும் உரிய கவனிப்பையும் அங்கீகாரத்தையும் பெறுவதை உறுதிச் செய்யவே இந்தத் தனி அறிவிப்பு வெளியிடப்படுவதாகப் பிரதமர் கூறினார்.

அதேவேளையில், Pondok பள்ளிகள், Tahfiz மையங்கள் மற்றும் Sekolah Agama Rakyat உள்ளிட்ட இஸ்லாமியக் கல்வி நிறுவனங்களுக்கும் தொடர்ந்து மேம்படுத்தப்பட்ட நிதி ஆதரவு வழங்கப்படும் என்றும், நாட்டின் வளர்ச்சியில் அனைத்துச் சமூகத்தினரும் பயனடையும் வகையில் நிதிப் பகிர்வு நியாயமாக இருக்கும் என்றும் அவர் உத்தரவாதம் அளித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!