Latestமலேசியா

மலாக்கா தேர்தலில் காடேக் தொகுதியைத் தற்காக்கும் ம.இ.கா; கூடுதல் இடங்களிலும் போட்டியிடத் திட்டம் — சரவணன்

தாப்பா, ஆகஸ்ட்-17-வரவிருக்கும் மலாக்கா மாநிலத் தேர்தலில் ம.இ.கா தனது ஒரே தொகுதியான காடேக் (Gadek) சட்டமன்றத் தொகுதியைத் தக்க வைத்துக் கொள்ளப் போட்டியிடும் என, கட்சியின் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன் உறுதிப்படுத்தியுள்ளார்.

​அதே வேளையில், கூடுதல் தொகுதிகளில் போட்டியிடுவது குறித்தும் கட்சித் தலைமை தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது.

பேராக், ​தாப்பாவில் செய்தியாளர்களிடம் பேசிய அத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான சரவணன், வேட்பாளர்களின் பலம் மற்றும் வெற்றி வாய்ப்புகளின் அடிப்படையில் தகுதியான வேட்பாளர்களைக் கட்சித் தலைவர் தான் ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் தேர்வு செய்து வருவதாகக் கூறினார்.

​இதனிடையே, வாக்காளர்களை அடையாளம் காணும் தேர்தல் களப் பணிகளும், பிரசாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய உள்ளூர் விவகாரங்களை ஆராயும் பணிகளும் ஏற்கனவே தொடங்கிவிட்டன என்றார் அவர்.

​கடந்த 2021 மலாக்கா மாநிலத் தேர்தலில், பாரிசான் நேஷனல் கூட்டணியில் போட்டியிட்ட ம.இ.கா, 6 முனைப் போட்டியில் தனது வேட்பாளர் வி.பி. சண்முகம் மூலம் 559 வாக்குகள் பெரும்பான்மையில் காடேக் தொகுதியை வென்றது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!