Latestஅமெரிக்காஉலகம்

ஃபெராரியின் முதல் மின்சார கார் 40 மில்லியன் அமெரிக்க டாலருக்கு ஏலம் போய் உலக சாதனை

கலிஃபோர்னியா, ஆகஸ்ட்-17-பிரபல சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான ஃபெராரியின் (Ferrari) முதல் முழுமையான மின்சாரக் கார், ஏலத்தில் சுமார் 40 மில்லியன் டாலர் விற்பனையாகி உலக சாதனை படைத்துள்ளது.

​அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் நடைபெற்ற சோதேபிஸ் (Sotheby’s) நல்லெண்ண ஏலத்தில், ‘லூசே’ (Luce) என்ற இந்த கார் ஏலம் விடப்பட்டது.

​இதன் மூலம், ஏலத்தில் அதிக விலைக்கு விற்கப்பட்ட புதிய கார் என்ற வரலாற்றுச் சாதனையை இது பெற்றுள்ளது.

​Apple நிறுவனத்தின் முன்னாள் வடிவமைப்புத் தலைவர் Jony Ive ஒத்துழைப்புடன் வடிவமைக்கப்பட்ட இந்த கார், 4 கதவுகளையும், ஆயிரம் குதிரைத்திறனையும் (horsepower) கொண்டுள்ளது.

​மின்சார வாகனப் பிரிவில் களமிறங்கியதற்காக ஆரம்பத்தில் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்ட போதிலும், வாடிக்கையாளர்களிடம் இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதாக ஃபெராரி நிறுவனம் தெரிவித்துள்ளது.

​கடந்தாண்டு ஃபெராரியின் Daytona SP3 மாடல் 26 மில்லியன் டாலருக்கு விற்பனையான சாதனையை இந்த ‘லூசே’ மின்சார கார் முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!