Latestஇந்தியா

இனி ‘கேரளா’ இல்லை… ‘கேரளம்’!; பெயர் மாற்றத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்

புதுடெல்லி, ஆகஸ்ட் 18 — இந்தியாவின் கேரளா (Kerala) மாநிலம் இனி அதிகாரப்பூர்வமாக ‘கேரளம்’ (Keralam) என அழைக்கப்படவுள்ளது. மாநிலத்தின் பெயரை மாற்றுவதற்கான மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஆகஸ்ட் 17ஆம் தேதி ஒப்புதல் வழங்கியதைத் தொடர்ந்து, பெயர் மாற்றம் சட்டப்பூர்வமாகியுள்ளது.

‘கேரளா’ என்ற பெயரை ‘கேரளம்’ என மாற்றக் கோரி, அம்மாநில சட்டப்பேரவை கடந்த 2024ஆம் ஆண்டு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருந்தது.

இதனைத் தொடர்ந்து கொண்டுவரப்பட்ட ‘Kerala (Alteration of Name) Bill, 2026’, கேரள சட்டப்பேரவையின் கருத்தைப் பெற்ற பின்னர் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. தற்போது குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற்றுள்ளது.

இதன்மூலம் இந்திய அரசியலமைப்பின் முதல் அட்டவணையிலும் ‘கேரளா’ என்பதற்குப் பதிலாக ‘கேரளம்’ என மாற்றப்படவுள்ளது.

மலையாள மொழியில் ஏற்கனவே ‘கேரளம்’ என்றே அழைக்கப்பட்டு வரும் நிலையில், இனி அதுவே மாநிலத்தின் அதிகாரப்பூர்வ பெயராகவும் இடம்பெறவுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!