Latestமலேசியா

டுங்குனில் பெரிய வகை சூரியக் கரடி பிடிபட்டது: கிராம மக்கள் நிம்மதி

டுங்குன், ஆகஸ்ட்-19-திரங்கானு, டுங்குனில் Kampung Padang Ping கிராமத்தில் சுற்றித் திரிந்த பெரிய வகை சூரியக் கரடியொன்று பிடிபட்டுள்ளது. 50 முதல் 70 கிலோகிராம் எடையுடைய அந்த ஆண் கரடி, திரங்கானு வனவிலங்கு மற்றும் தேசிய பூங்காக்கள் துறையான PERHILITAN அமைத்திருந்த பொறியில் சிக்கியதாக அதன் இயக்குனர் Dennis Ten Choon Yung தெரிவித்தார்.

கடந்த திங்கட்கிழமை காலை 8.00 மணிக்கு கிராம மக்களிடமிருந்து தகவல் கிடைத்தது. அதன் பிறகு PERHILITAN அதிகாரிகள் அங்கு சென்று அவ்விலங்கைக் கண்காணித்தனர். உடல் பரிசோதனையில் அக்கரடி ஆரோக்கியத்துடனும், காயங்கள் ஏதுமின்றியும் இருந்தது கண்டறியப்பட்டது. இயற்கையான வாழ்விடத்தில் அக்கரடியை மீண்டும் விட ஏதுவாக, அது PERHILITAN அலுவலகத்திற்குக் கொண்டுச் செல்லப்பட்டதாக அவர் கூறினார்.

இதனிடையே, அருகிலுள்ள வனப் பகுதியிலிருந்து வந்திருக்கலாம் என நம்பப்படும் அச்சூரியக் கரடி மரங்களையும் பயிர்களையும் சேதப்படுத்தியது. அதோடு தோட்டங்களில் வேலை செய்யும் கிராம மக்கள் தங்கள் பாதுகாப்பு குறித்து பெரும் கவலையடைந்திருந்ததாக Kampung Padang Ping கிராம மேம்பாடு மற்றும் பாதுகாப்பு குழுத் தலைவர் Nik Othman Nik Muhamad குறிப்பிட்டார். அக்காட்டு விலங்கு வெற்றிகரமாகப் பிடிக்கப்பட்டிருப்பது நிம்மதியை அளிப்பதாக அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!