
கோலாலம்பூர், ஆகஸ்ட்-22-Minda Presiden PAS என்ற தலையங்கத்தில் வெளியான கருத்து தொடர்பாக, பாஸ் கட்சித் தலைவர் தான் ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங்கிடம் புக்கிட் அமான் போலீஸார் வாக்குமூலம் பதிவுச் செய்துள்ளனர்.
_”இஸ்லாமிய நாடும் முஸ்லீம் அல்லாதவர்களுடனான அதன் உறவும்”_ என்ற தலைப்பில் ஹாடி எழுதிய கட்டுரைக்கு எதிராக அளிக்கப்பட்ட புகார்களைத் தொடர்ந்து இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
போலீஸ் அதிகாரிகள் ஹாடியிடம் விசாரணை நடத்தியதை அவரது அரசியல் செயலாளரும் பாச்சோக் நாடாளுமன்ற உறுப்பினருமான Mohd Syahir bin Che Sulaiman உறுதிப்படுத்தினார்.
ஹாடி விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும், நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டால் அதைச் சட்டப்படி எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மதச்சார்பற்ற கொள்கை மற்றும் இஸ்லாமிய நிர்வாகம் தொடர்பாக ஹாடி குறிப்பிட்ட கருத்துகள், பாஸ் மற்றும் DAP தலைவர்களிடையே கடுமையான கருத்து மோதலை ஏற்படுத்தியுள்ளது.



