Latestமலேசியா

குவாந்தான் – சிரம்பான் சாலையில் கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து; ஆசிரியை மற்றும் 6 வயது மகன் பரிதாப பலி

ரொம்பின், ஆகஸ்ட்-22-பஹாங், ரொம்பின் அருகே நேற்றிரவு நிகழ்ந்த கோர விபத்தில் ஆசிரியை ஒருவரும் அவரது 6 வயது மகனும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிரம்பானைச் சேர்ந்த 46 வயதான ஆசிரியை Kartinie Ngatenan, அவரது கணவர் மற்றும் 6 வயது மகன் Muhammad Akif ஆகியோர் Toyota Estima இரக காரில் ஃபல்டா கெராத்தோங் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தனர்.

குவாந்தான் – சிரம்பான் சாலையின் 149.9-ஆவது கிலோ மீட்டர் தூரத்தில் கார் சென்றுகொண்டிருந்தபோது, சாலையில் கிடந்த மரக்கட்டை மீது மோதியதில் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரப் பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் தலையில் பலத்தக் காயமடைந்த ஆசிரியை Kartinie-யும் அவரது 6 வயது மகனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

வாகனத்தை ஓட்டி வந்த அவரது 47 வயது கணவர் தலையில் காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முவாட்சாம் ஷா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து 1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவுச் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!