Latestமலேசியா

பத்து பஹாட் கடற்பகுதியில் 3.1 ரிக்டர் அளவில் மிதமான நில அதிர்வு பதிவு

பத்து பஹாட், ஆகஸ்ட்-26,ஜோகூர், பத்து பஹாட் கடற்பகுதியில் நேற்று மாலை 4.12 மணியளவில் ரிக்டர் அளவில் 3.1-ராகப் பதிவான இலேசான நில அதிர்வு உணரப்பட்டது.

​மலேசிய வானிலை ஆய்வு மையமான MetMalaysia வெளியிட்ட தகவலின்படி, இந்த நில அதிர்வு 10 கிலோ மீட்டர் ஆழத்தில், பத்து பஹாட்டிலிருந்து தென்மேற்கே சுமார் 18 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்தது.

எனினும், ​இந்த நில அதிர்வால் மலேசியாவுக்கு எவ்வித சுனாமி அச்சுறுத்தலும் இல்லை என MET Malaysia உறுதிப்படுத்தியது.

​நில அதிர்வை உணர்ந்த பொது மக்கள், வானிலை ஆய்வு மையத்தின் இணையவழி கருத்துக்கணிப்புப் படிவத்தை பூர்த்திச் செய்து உதவுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!