
சுபாங் ஜெயா, ஆகஸ்ட்-26,சன்வே லேகூன் (Sunway Lagoon) கேளிக்கைப் பூங்காவில் கடந்த சனிக்கிழமை நிகழ்ந்த roller coaster இராட்டின விபத்துக்கு உலோகக் களைப்பு (metal fatigue) காரணமாக இருக்கலாம் என சன்வே குழுமத்தின் நிறுவனர் தான் ஸ்ரீ Jeffrey Cheah தெரிவித்துள்ளார்.
உள்ளூர் மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் உட்பட 11 முதல் 44 வயதுக்குட்பட்ட 22 பேர் இந்த சவாரியில் இருந்த நிலையில், அவர்களில் 10 பேருக்கு இலேசான காயம் ஏற்பட்டது.
விபத்து குறித்து ஆழ்ந்த வருத்தம் தெரிவித்த Jeffrey Cheah, இந்த roller coaster 2 முதல் 3 வாரங்களுக்கு முன்புதான் ஆய்வு செய்யப்பட்டுப் பராமரிக்கப்பட்டது என்றார்.
மேலும், இந்த விபத்தில் எந்தவோர் உயிரிழப்பும் ஏற்படாதது நல்வாய்ப்பானது என்றும் அவர் குறிப்பிட்டார்.
விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரித்து வரும் நிலையில், இதில் சதிச்செயல் எதுவும் இல்லை என்பதை போலீஸ் உறுதிப்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும், அதிகாரிகளின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி அனைத்துப் பொழுதுபோக்கு அம்சங்களிலும் கடுமையான பாதுகாப்புத் தரத்தை நிலைநிறுத்துவதாகவும் சன்வே கேளிக்கைப் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது



