
சிபூ, ஆகஸ்ட்-30,சரவாக் மாநிலத்தின் கனோவிட் (Kanowit) மாவட்டத்தை Desa Lestari அல்லது நிலையான கிராமத் திட்டத்தில் சேர்த்துக் கொள்வது குறித்து பரிசீலிக்குமாறு, தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் டத்தோ ஏரன் அகோ டகாங் கோரிக்கை விடுத்துள்ளார்.
கனோவிட், Sungai Poi பகுதியில் உள்ள மெனாலூன் இலி (Melanun Ili) எனுமிடத்தில் நடைபெற்ற Jalan Melanun – Sungai Poi Kanowit சாலைத் திட்டத்தின் மூன்றாம் கட்ட அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இதனைக் கேட்டுக் கொண்டார்.
கிராமப்புற மக்களின் பொருளாதார வளர்ச்சியை மிகவும் திட்டமிட்ட முறையிலும் நிலையானதாகவும் மேம்படுத்தும் நோக்கில் இந்தத் திட்டம் அவசியமானது என்றார் அவர்.
கிராம மேம்பாடு என்பது இரண்டாம் தர மேம்பாடு அல்ல என்றும், நீண்ட வீடுகள் (Rumah Panjang) மற்றும் கிராமங்களில் வசிக்கும் மக்களும் அனைத்து வகையான அடிப்படை வசதிகளையும் சமமான பொருளாதார வாய்ப்புகளையும் பெற முழு உரிமை உண்டு என்றும் அமைச்சர் சுட்டிக் காட்டினார்.



